உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி தொகுதியில் 21ல் என் மண் என் மக்கள் யாத்திரை

அரவக்குறிச்சி தொகுதியில் 21ல் என் மண் என் மக்கள் யாத்திரை

கரூர்: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் வரும், 21ல், பா.ஜ., சார்பில் என் மண், என் மக்கள் யாத்திரை நடக்கிறது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணமாலை, மாநிலம் முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக, என் மண், என் மக்கள் என்ற பெயரில் யாத்திரை நடத்தி வருகிறார். கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதிகளில் ஏற்கனவே, என் மண், என் மக்கள் யாத்திரை முடிந்து விட்டது.இந்நிலையில் மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் சொந்த தொகுதியான, அரவக்குறிச்சி சின்னதாராபுரத்தில் வரும், 21ல் மாலை, 3:30 மணிக்கு என் மண், என் மக்கள் யாத்திரை நடக்கிறது.அதில் அண்ணாமலை கலந்து கொள்கிறார். இத்தகவலை, கரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில் நாதன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்