மேலும் செய்திகள்
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி ஆய்வு
10-Nov-2024
கரூர்: ''மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில், 25 ஆயிரத்து, 844 விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் கூறினார்.கரூர் மாவட்டம், வெள்ளியணை தாளியாப்பட்டி, உப்பிடமங்கலம் கிழக்கு கருப்பூர், பவ்வித்திறம் பாரதி நகர், க-பரமத்தி மோலப்பாளையம், தென்னிலை கீழ்பாகம், முல்லை நகர் ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடக்கிறது. இங்கு, கலெக்டர் தங்கவேல் ஆய்வு மெற்கொண்டார். பின்னர் அவர், கூறியதாவது: மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம் நடந்தது. முகாம்களில் கடந்த, 16ல், 4,908 படிவங்களும், 17ல், 7,707 படிவங்களும், 23ல், 4,595 படிவங்களும், 24ல், 8,634 படிவங்களும் என மொத்தம், 25,844 விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ளன. வரும் ஜன., 6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, தாசில்தார்கள் குமரேசன் (கரூர்), பிரபாகரன் (கிருஷ்ணராயபுரம்), தனசேகரன் (புகழூர்) ஆகியோர் உடனிருந்தனர்.
10-Nov-2024