உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 489 பேர் கைது

கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 489 பேர் கைது

கரூர்: கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட, 489 பேரை போலீசார் கைது செய்தனர்.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொது விநியோக திட்டத்தை சீர்குலைக்க கூடாது. குறைந்தப்பட்ச ஊதியம், 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மின்சார திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில், தி.மு.க., காங்., கம்யூ., கட்சி தொழிற் சங்கங்கள் ஈடுபட்டன. கரூர் தலைமை தபால் நிலையம் முன், தி.மு.க., தொழிற்சங்கமான தொ.மு.ச., மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தொழிற்சங்க நிர்வாகிகள் ஜீவானந்தம், வடிவேலன், முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த, 270 பெண்கள் உள்பட, 489 பேரை, கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ