உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஜெர்மனியில் வீட்டு உபயோக ஜவுளி கண்காட்சி கரூரில் இருந்து 69 ஏற்றுமதியாளர்கள் பயணம்

ஜெர்மனியில் வீட்டு உபயோக ஜவுளி கண்காட்சி கரூரில் இருந்து 69 ஏற்றுமதியாளர்கள் பயணம்

கரூர்: ஜெர்மனியில், ஜன., 14ல் தொடங்கும் வீட்டு உபயோக ஜவுளி கண்காட்சியில் பங்கேற்க கரூரில் இருந்து, 69 ஏற்றுமதியாளர்கள் செல்கின்றனர்.கரூர் மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்டவை உள்-ளன. இங்கு ஸ்கிரீன், தலையணை உறைகள், மேஜை விரிப்பு, கைகுட்டை, சோபா விரிப்பு, துண்டு ஆகியவை உற்பத்தி செய்-யப்படுகிறது. இவை பிரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரே-லியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகி-றது.இதன்மூலம் ஆண்டுக்கு, 6,670 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில், ஜெர்மனி நாட்டின் பிராங்பர்ட் நகரில், உலகளாவிய வீட்டு உபயோக ஜவுளி கண்-காட்சி நடப்பது வழக்கம். இந்தாண்டு ஜன., 14ல் ஜவுளி கண்-காட்சியில் பங்கேற்க, கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் தயாராகி வருகின்றனர்.இது குறித்து கரூர் ஜவுளி உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் சுகுமார் கூறியதாவது:வரும் ஜன., 14, 15, 16, 17 ஆகிய நாட்களில் ஜெர்மனி நாட்டின் பிராங்பர்ட் நகரில் கண்காட்சி நடக்கிறது. இதில் கரூர் மாவட்டத்தில் இருந்து, 69 ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பங்கேற்-கின்றனர். இங்கு, 3,000க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவ-னங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் தங்களது பொருட்-களை காட்சிப்படுத்த உள்ளனர். இந்தியாவில் இருந்து, 500க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் பொருட்களை காட்சிப்படுத்த உள்ளனர்.இவ்வாறு கூறினார்.இதுகுறித்து, கரூர் ஏற்றுமதியாளர் ஸ்டீபன் பாபு கூறுகையில், '' கம்பளி, பருத்தி, செயற்கை நாரிழை, பட்டு, கச்சா பட்டு உற்-பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் அரங்கு-களை அமைந்து வருகின்றன. கடந்த ஆண்டை விட, இந்தாண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,''


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி