| ADDED : ஏப் 04, 2024 04:25 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, சூரியனுார பஞ்., பாறைப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில், நேற்று முன்தினம் காலை வட்டார புள்ளியியல் ஆய்வாளரும், தேர்தல் பறக்கும் படை அலுவலருமான சிவக்குமார் போலீசாருடன் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.அப்போது அவ்வழியாக வந்த விவசாய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டார். அப்போது, வாழைக்காய் வியாபாரத்திற்காக கொண்டு வந்த ஓட்டுனர் தினேஷிடம் இருந்து, 60 ஆயிரம் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்றதால் கைப்பற்றினர். இதையடுத்து விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் இதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், தேர்தல் பறக்கும்படை அலுவலர் சிவகுமார் கொடுத்த புகார்படி, மேலப்பட்டியை சேர்ந்த சுரேஷ், பாறைப்பட்டி பொன்னர், கோப்பு பகுதியை சேர்ந்த தங்கவேல், எஸ். புதுக்கோட்டையை சேர்ந்த பிரபு, முதலைப்பட்டி அய்யர் மற்றும், 20 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம், 35 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.