மயானம் சென்று வர ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் தேவை
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி கிழக்கு தெருவில் உள்ள மயானத்திற்கு சென்று வர, நங்காஞ்சியாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்து தர, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி கிழக்கு தெருவில், நங்காஞ்சி ஆற்றின் கிழக்கே மயானம் அமைந்துள்ளது. இங்கு பலதரப்பட்ட மக்கள் இறந்த உடல்களை எரித்தும், புதைத்தும் வருகின்றனர். மயானம் செல்வ-தென்றால் நங்காஞ்சி ஆற்றில் இறங்கி செல்ல வேண்டும். ஆனால் ஆற்றில் சேறும் சகதியுமாக கழிவுநீர் செல்வதால், இறங்க முடியாத சூழ்நிலை உள்ளது.இதுகுறித்து பலமுறை தாசில்தார், பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என, இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே நங்-காஞ்சி ஆற்றின் குறுக்கே, மயானம் செல்வதற்கு தரைப்பாலம் அமைத்து தர வேண்டும்.