ரயில்வே ஸ்டேஷன் சாலையில் திரியும் கால்நடைகளால் தொல்லை
கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் திரியும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளால் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக உள்ள, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் நாள்தோறும், 25க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்கின்றன. குறிப்பாக, கரூர்-சேலம் வழித்தடத்தில் புதிய ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வளாக சாலையில் ஆடு, மாடுகள் நடமாட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கால்நடை-களை வளர்த்து வருபவர்களில் சிலர், அவற்றை தங்களது வீடு-களில் கட்டி வளர்க்காமல், சாலையில் திரிய விடுகின்றனர். கால்ந-டைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அதில், ஆடுகள் திடீரென வாகனங்களின் குறுக்கே பாய்வதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். கால்நடைகளை சாலையில் திரிய விடும் உரிமையா-ளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்-டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.