உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே நிழற்கூடம் தேவை

திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே நிழற்கூடம் தேவை

திருக்காம்புலியூர் ரவுண்டானாஅருகே நிழற்கூடம் தேவைகரூர், அக். 20-திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில், பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர், கோவை சாலையில் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கு கோவை, ஈரோடு ஆகிய சாலை மார்க்கமாக. புன்னம் சத்திரம், நொய்யல், பவித்தரம், க.பரமத்தி, தென்னிலை உள்பட பல்வேறு இடங்களுக்கு பஸ்களில் தினமும் ஏராளமானோர் செல்கின்றனர். இங்கிருந்து அரசு, தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. சாலையில் எப்போதும் போக்குவரத்து காணப்படும்.வெயில் காலங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் -மக்கள், நிழற்கூடம் இன்றி அவதிப்படுகின்றனர். மழை பெய்யும் போது, பஸ் ஸ்டாப்பில் உள்ள கடைகளை தேடி பொது மக்கள் ஓடும் நிலை உள்ளது. எனவே, இந்த பஸ் ஸ்டாப்பில் பொதுமக்கள் வச-திக்காக, நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை