உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாய்க்காலில் படர்ந்த ஆகாய தாமரை

வாய்க்காலில் படர்ந்த ஆகாய தாமரை

கரூர்: கரூர் நகரின் பிரதான வாய்க்காலாகவும், அமராவதி நதியின் முக்கிய கிளை வாய்க்காலாகவும் ராஜவாய்க்கால் உள்ளது. அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் செட்டிப்பாளையம் அணைக்கட்டில் இருந்து பிரியும் இந்த வாய்க்கால், கரூர், பள்ளப்பாளையம், ஆண்டாங்கோயில் கிழக்கு, திருக்காம்புலியூர், வெங்கமேடு, அரசு காலனி, பஞ்சமாதேவி, நெரூர் வழியாக திருமுக்கூடலுார் பகுதியில் மீண்டும் அமராவதி ஆற்றில் இணைகிறது. இந்த வாய்க்கால் மூலம், 20,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்த வாய்க்ல் பாசனம் மூலம் நெல், வாழை, கோரை போன்றவை பயிரிடப்படுகின்றன. கரூர் நகரின் நீராதாரமாகவும், விவசாயத்திற்கு உறுதுணையாகவும் உள்ள இந்த வாய்க்காலில் அமராவதி ஆற்றில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின்போது மட்டும் தண்ணீர் செல்கிறது. குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே போன்ற கோடை காலங்களில் அமராவதி ஆறு வறண்டு காணப்படுவதால், வாய்க்காலிலும் நீர்வரத்தின்றி உள்ள நிலையில், நகர்ப் பகுதியில் வெளியேற்றப்படும் கழிவுநீர் கலக்கிறது. முறையாக துார்வாரப்படாமல் ஆகாய தாமரை படர்ந்து நீரோட்டம் பாதிக்கப்படுகிறது.இதுகுறித்து, பஞ்சமாதேவி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கூறுகையில், 'வாய்க்காலில் அதிகளவு ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளது. இதனால், தண்ணீரின் போக்கை மாற்றி வருகிறது. பாசன வாய்க்காலில் படர்ந்துள்ள செடிகளை விரைந்து அகற்ற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ