| ADDED : ஆக 03, 2024 08:02 PM
குளித்தலை: குளித்தலை அருகே மாயனூர் காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் மாயமானார். தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூர் ஊராட்சி கலிங்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மரம் வெட்டும் கூலித் தொழிலாளி பழனிச்சாமி மகன் சண்முகம். (வயது. 23), டிப்ளமோ படித்துள்ளார். இவர் திருச்சி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மதியம் 2 மணி அளவில் தனது நண்பர்களுடன் மாயனூர் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு, தனது நண்பர்களுடன் காவிரி ஆற்றில் தடை செய்யப்பட்ட பகுதியான காவிரி ஆற்றில் இருந்து பாசன வாய்க்கால் பிரிவு பகுதியில் தனது 4 நண்பர்களுடன் குளித்தார்.அப்போது நாகனூர் பகுதியை சேர்ந்த வாலிபர் சண்முகம் என்பவர் மாயமானார். தகவல் அறிந்த 20 க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.மாயனூர் கதவனை மற்றும் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலுக்கு ஆடிப்பெருக்கையொட்டி அதிகளவு பக்தர்கள் வந்ததால் காவிரி ஆற்றின் வெள்ளம் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் தங்கவேலு தண்ணீரில் மாயமான வாலிபரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருவதை பார்வையிட்டார்.மாவட்ட ஆட்சியர் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மகேந்திரன், மாயனூர் இன்ஸ்பெக்டர் மற்றும் பலர் உடன் இருந்தனர். நீண்ட நேரமாக வாய்க்காலில் குளித்த காணாமல் போன வாலிபரை தீயணைப்பு துறை தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.இரவு நேரமானதால் தீயணைப்பு துறையினர் தேர்தல் பணியை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.