உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உ.பி., முன்னாள் துணை முதல்வர் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு

உ.பி., முன்னாள் துணை முதல்வர் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு

குளித்தலை:''மத்திய அரசின் திட்டங்களை, தமிழக அரசு முடக்கி உள்ளது,'' என, உத்தர பிரதேச முன்னாள் துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறினார்.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் கிராமத்தில் குளித்தலை சட்டசபை தொகுதி மத்திய அரசு நலத்திட்ட பயனாளிகள் மற்றும் பொது மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, தினேஷ் சர்மா அளித்த பேட்டி:தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், காசி ஆகியவை அயோத்தியுடன் தொடர்பு உள்ளவை. தமிழக அரசு மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை முடக்கி உள்ளது. மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு திட்டம், விவசாயிகளுக்கு, 6,000 ரூபாய் வழங்கும் திட்டம், உஜ்வாலா காஸ் சிலிண்டர் திட்டத்தை தமிழக அரசு முடக்கி வைத்துள்ளது. மத்திய அரசின் நிதிகளை, தமிழக அரசு ஊழல் செய்கிறது.பிரதமர் மோடி, 2013ல், ஸ்ரீரங்கம் வந்து சுவாமி தரிசனம் செய்த பின், 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார். வரும், 20ம் தேதி ஸ்ரீரங்கத்தில் தரிசனம் மேற்கொள்ளும் மோடி, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராவார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி