உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரயில் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை தேவை

ரயில் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை தேவை

கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை ரயில் சுரங்கப்பாதையில், தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை அருகில் ரயில்வே கேட் உள்ளது. இதன் அருகில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை வழியாக, லாலாப்பேட்டை சுற்று வட்டார பகுதி மக்கள் காவிரி ஆறு, சிவன் கோவில் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் சுரங்கப்பாதை அருகில் சிறிய பாசன வாய்க்கால் மற்றும் கட்டளை புதிய வாய்க்கால் செல்கிறது.வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. தண்ணீர் செல்லும் போது ரயில்வேகேட் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி பாசம் பிடித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சுரங்கப்பாதை வழியாக செல்லும் போது, சிரமப்படுகின்றனர். எனவே, சுரங்கப்பாதையில் நீர் தேங்காமல் இருக்கும் வகையில், பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி