உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.27.73 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்

ரூ.27.73 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்

கரூர்: சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 27 லட்சத்து, 73 ஆயிரத்து, 289 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.கரூர், க.பரமத்தி பகுதியில் அறுவடை செய்யப்படும் தேங்காய், நொய்யல் அருகில் சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி நேற்று நடத்த ஏலத்தில், 12 ஆயிரத்து, 668 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 32.66 ரூபாய், அதிகபட்சமாக, 50.88 ரூபாய், சராசரியாக, 46.35 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 3,646 கிலோ எடையுள்ள தேங்காய்கள், ஒரு லட்சத்து, 24 ஆயிரத்து, 677 ரூபாய்க்கு விற்பனையானது.கொப்பரை தேங்காய் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 132.69 ரூபாய், அதிகபட்சமாக, 144.15 ரூபாய், சராசரியாக, 143.69 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 106.92 ரூபாய், அதிகபட்சமாக, 142.39 ரூபாய், சராசரியாக, 137.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக 11 ஆயிரத்து, 397 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய்,14 லட்சத்து, 57 ஆயிரத்து,498 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.எள், 126 மூட்டை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக. 110.99 ரூபாய், அதிகபட்சமாக, 137.11 ரூபாய், சராசரியாக, 133.59 ரூபாய், வெள்ளை ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 129 ரூபாய், அதிகபட்சமாக, 133 ரூபாய், சராசரியாக, 132 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 9,396 கிலோ எடையுள்ள எள், 11 லட்சத்து, 91 ஆயிரத்து, 114 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 27 லட்சத்து, 73 ஆயிரத்து, 289 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ