உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலரில் விழிப்புணர்வு கரூர் வந்த திருப்பூர் முதியவர்

டூவீலரில் விழிப்புணர்வு கரூர் வந்த திருப்பூர் முதியவர்

கரூர், ஜன. 1-ெஹல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து, தமிழகம் முழுவதும் டூவீலரில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் முதியவர், நேற்று கரூர் வந்தார்.திருப்பூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி, 66. இவர் கடந்த, 2005 முதல், டூவீலரில் சென்று ெஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கடந்த டிச.,5ல், திருப்பூரில் டூவீலரில் விழிப்புணர்வு பயணத்தை தொடர்ந்த சிவசுப்பிரமணி, நேற்று காலை கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே வந்தார்.அப்போது, போக்குவரத்து போலீசார் உதவியுடன், பொதுமக்களுக்கு சிவசுப்பிரமணி, ெஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்த, துண்டு பிரசுரங்களை வழங்கினார். பிறகு, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாருக்கு புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை