உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு கல்லுாரி முதல்வருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

அரசு கல்லுாரி முதல்வருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

குளித்தலை : குளித்தலை அடுத்த தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் ஹேமா நளினி ஓய்வு பெற்றதை ஒட்டி, அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.முதல்வர் ஹேமா நளினி தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் பாலசுப்ரமணியன், தமிழ் துறை தலைவர் பாலுசாமி, கணிதத்துறை தலைவர் சத்தியராஜ், வணிகவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன், கணிணி அறிவியல் துறை தலைவர் மணிவாசகம், நிதியாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருச்சி பெரியார் கல்லுாரி பேராசிரியர் ராம்ஜி, யூனியன் குழு தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பாராட்டி பேசினர். பணி நிறைவு பெற்ற முதல்வர் ஹேமா நளினி ஏற்புரை ஆற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ