உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோவில்களில் தொல்லியல், ஓலை சுவடி வல்லுனர்கள் ஆய்வு

கோவில்களில் தொல்லியல், ஓலை சுவடி வல்லுனர்கள் ஆய்வு

கோவில்களில் தொல்லியல்,ஓலை சுவடி வல்லுனர்கள் ஆய்வுகுளித்தலை, அக். 2-திருப்பூர் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் ரத்தினவேல்பாண்டியன் உத்தரவுப்படி, கடந்த ஒரு வாரமாக குளித்தலை அடுத்த, நங்கவரம் கிராமத்தில் சுந்தரேஸ்வரர் கோவில், பிடாரி சாத்தாயி அம்மன் கோவில், பொய்யாமணி கிராமத்தில் மாரியம்மன் கோவில், உறுமனார் கோவில், ஏகிரி அம்மன் கோவில், நல்லுார் கிராமத்தில் மகாமாரியம்மன். பாம்பலம்மன், ஆர்ச்சம்பட்டி மகாமாரியம்மன், பெருந்தலுார் ஆவுடைலிங்கேஸ்வரர் கோவில், சிங்கம்பட்டி, கருப்பண்ணசுவாமி கோவில், கீழச்சர்க்கரை கோட்டை, பெரியசாமி கோவில், வீரியம்பட்டி கன்னிமார் கோவில்களில், தொல்லியல் வல்லுனர் அர்சுனன், ஓலைச்சுவடி வல்லுனர் உத்திராடம் தலைமையில் ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.கோவில் செயல் அலுவலர் நரசிம்மன், உபயதாரர் பிரபுகணபதி குமார் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை