குளித்தலை: கடவூர் பகுதியில், சட்டவிரோதமாக வெள்ளைக்கல் வெட்டி எடுப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, பா.ஜ., ஒன்றிய தலைவர் சுரேஷ், கடவூர் தாசில்தார் பேசிய ஆடியோ சமூக வலைதளங்-களில் வைரலாகி வருகிறது.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கடவூர் மலைப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக வெள்ளை கல், சுண்-ணாம்புக்கல் வெட்டி எடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம், அய்யம்பாளையம் பகுதியில், வெள்ளைக்கல் வெட்டி எடுத்து வரும்போது, இதை பார்த்த கடவூர் ஒன்றிய பா.ஜ., தலைவர் சுரேஷ் என்பவர், கடவூர் தாசில்தார் இளம்பருதியிடம் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, தாசில்தார் கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்துள்ளார்.மீண்டும் தாசில்தாரை தொடர்பு கொண்ட சுரேஷ், 'சட்டவிரோத-மாக கல் வெட்டி எடுப்பவர்கள், தாசில்தார் எனது உறவினர், அவ-ருக்கும் பங்கு உண்டு; உங்களால் என்ன செய்ய முடியும் என்கின்-றனர்' என்றார். தாசில்தார் அதற்கு, '50 சதவீத கமிஷன் மற்றும் பார்ட்னராக இருந்து வருகிறேன்; உங்களுக்கு என்ன என்று கூறி-விட்டு மீண்டும் தொலைபேசி தொடர்பை துண்டித்துள்ளார். தற்போது இது தொடர்பான ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இது குறித்து, கடவூர் தாசில்தார் இளம்பருதி கூறுகையில், '' வேண்டுமென்றே என் பெயரை கெடுக்கும் விதமாக, ஒரு சிலர் செயல்படுகின்றனர். சட்ட விரோதமாக செயல்படும் வெள்-ளைக்கல் வெட்டி எடுப்பவர்களிடம், பணம் கேட்டு மிரட்டி தரா-ததால், எங்களிடம் புகார் கூறுகின்றனர்,'' என்றார்.இது குறித்து ஆர்.டி.ஓ., தனலட்சுமி கூறுகையில், ''புகார் குறித்து தாசில்தாரிடம் விளக்கம் கேட்கப்படும்,'' என்றார்.