மேலும் செய்திகள்
தீயணைப்பு நிலையங்களில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு
3 hour(s) ago
கரூர்: கரூர் தீயணைப்பு நிலையத்தில், தீ பாதுகாப்பு குறித்த, விழிப்பு-ணர்வு முகாம் நேற்று நடந்தது.தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், 'நாங்கள் மீட்பதற்காக வேலை செய்கிறோம்' என்ற தலைப்பில், பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் விழிப்பு-ணர்வு முகாம், மாநிலம் முழுவதும் உள்ள, 375 தீயணைப்பு நிலையங்களில் நடக்கிறது.அதன்படி, கரூர் தீயணைப்பு நிலையத்தில் நடந்த, விழிப்பு-ணர்வு முகாமில் நிலைய அலுவலர் திருமூர்த்தி, தீ விபத்தை தடுக்கும் முறைகள், முதலுதவி சிகிச்சை உள்ளிட்ட, பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.முகாமில், தீயணைப்பு துறை வீரர்கள், பொதுமக்கள் பங்கேற்-றனர்.
3 hour(s) ago