உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக் மீது டாரஸ் லாரி மோதி ஐயப்ப பக்தர் பலி; இருவர் காயம்

பைக் மீது டாரஸ் லாரி மோதி ஐயப்ப பக்தர் பலி; இருவர் காயம்

குளித்தலை, டிச. 15-மகாதானபுரம் அருகே, பைக் மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில், ஐயப்ப பக்தர் இறந்தார். இருவர் காயமடைந்தனர்.குளித்தலை அடுத்த, கம்பம்மநல்லுார் தேவேந்திர குல தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார், 28. கொத்தனார். இவரது மகன் ஹார்த்திக்ராஜ், 7, மகாதானபுரம் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். தந்தை, மகனும் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்துள்ளனர்.நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மகாதானபுரத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, தனக்கு சொந்தமான ஹீரோ ஸ்பிளண்டர் ப்ரோ பைக்கில் வீட்டுக்கு செல்வதாக நின்று கொண்டிருந்தார்.அப்போது, அவருக்கு முன்னால் டாடா ஏஸ் சரக்கு வாகனம் நின்றிருந்தது. இந்த வாகனம் சென்ற பிறகு புறப்படலாம் என இருந்தபோது. திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற டாரஸ் லாரி அதி வேகமாக வந்து, பைக் மீதும், நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீதும் மோதியது.இதில் பைக்கில் அமர்ந்திருந்த சிறுவன் ஹார்த்திக்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். தந்தை சதீஷ்குமார், டாடா ஏஸ் சரக்கு வாகன டிரைவர் ஓமாந்துாரை சேர்ந்த விஜயகுமார், 25, ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம், மணவிடுதியை சேர்ந்த டாரஸ் லாரி டிரைவர் ரஞ்சித், 48, மீது லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து. விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி