உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மழை, பனி பொழிவால் அவரைக்காய் விலை அதிகரிப்பு

மழை, பனி பொழிவால் அவரைக்காய் விலை அதிகரிப்பு

கரூர்: மழை மற்றும் பனி பொழிவு காரணமாக, அவரைக்காய் வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த, 15 நாட்களாக பட்டை அவரைக்காய் உள்ளிட்ட காய்களின் விலை, மெல்ல மெல்ல உயர தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த மாதம் ஒரு கிலோ பட்டை அவரை, 60 முதல், 100 ரூபாய் வரை விற்றது. நேற்று ஒரு கிலோ, 80 முதல், 150 ரூபாய்க்கு கரூர் உழவர் சந்தை மற்றும் காமராஜ் தினசரி மார்க்கெட்டில் விற்றது.இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:கடந்த, இரண்டு மாதங்களாக மழை மற்றும் கடும் பனி பொழிவால் அவரை செடிகள் கருகி, பூக்கள் உதிர்ந்து விட்டது. மேலும், பூச்சி தாக்குதலால் அவரைக்காய் வரத்து குறைந்து விட்டது. இதனால் அவரைக்காயின், விலையும் அதிகரித்து விட்டது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி