| ADDED : ஜூன் 18, 2024 07:24 AM
கரூர் : மதுரை - பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில், சோதனை ஓட்டமாக நேற்று கரூர் வந்தது.பிரதமர் மோடி, தமிழகத்தில் வந்தே பாரத் ரயில் வழித்தடங்களை விரைவில், தொடங்கி வைக்க உள்ளார். அதில் மதுரையில் இருந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூரு வரையிலும், வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.மதுரையில் இருந்து அதிகாலை, 5:15 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டு, மதியம், 2:00 மணிக்கு பெங்களூருவை சென்றடைகிறது. நேற்று மதுரையில் இருந்து திருச்சி வழியாக சோதனை அடிப்படையில் இயக்கப்பட்ட, வந்தே பாரத் ரயில் காலை, 8:20 மணிக்கு கரூர் வந்தது.அப்போது, கரூர் ரயில்வே ஸ்டேஷனில், மற்ற ரயில்களுக்காக காத்திருந்த பயணிகள், வந்தே பாரத் ரயிலலை பார்த்ததும் கைதட்டி வரவேற்றனர். இரண்டு நிமிடங்களுக்கு பிறகு, வந்தே பாரத் ரயில், பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது.