உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ராகவேந்திரா மடத்தில் பிறந்தநாள் உற்சவம்

ராகவேந்திரா மடத்தில் பிறந்தநாள் உற்சவம்

கரூர்: கரூர் ராகவேந்திரா சுவாமி மடத்தில், அவதார உற்சவ விழா கொண்டாடப்பட்டது. அதில், சுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், புதிய வஸ்திரம் சாற்றி, புஷ்ப அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் விஸ்வா மீனா அகாடமி மாணவியரின் வீணை இசை நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை, கிளை மேலாளர் ரகோத்தமன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி