உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆக்கிரமிப்பில் பால் புகட்டும் மையம்: தாய்மார்கள் அவதி

ஆக்கிரமிப்பில் பால் புகட்டும் மையம்: தாய்மார்கள் அவதி

கரூர் : கரூர் பஸ் ஸ்டாண்டில், குழந்தைகளுக்கு பால் புகட்டும் மையம், மாநகராட்சி பணியாளர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால், தாய்மார்கள் அவதிப்படுகின்றனர்.முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளில், குழந்தைகளுக்கு பால் புகட்டும் மையங்களை ஏற்படுத்த உத்தரவிட்டார். அதன்படி, கரூர் பஸ் ஸ்டாண்டில் ஆவின் பாலகம் கடைக்கு அருகில், ஒரு அறை குழந்தைகளுக்கு பால் புகட்டும் மையமாக மாற்றப்பட்டது. கரூர் பஸ் ஸ்டாண்ட்டுக்கு வரும், தாய்மார்கள் அந்த அறைக்கு சென்று, குழந்தைகளுக்கு பால் புகட்டி வந்தனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக, பஸ் ஸ்டாண்டில் உள்ள பால் புகட்டும் மையத்தில், மாநகராட்சியை சேர்ந்த ஊழியர்கள், பஸ் ஸ்டாண்டில் கடை வைத்திருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். பஸ் ஸ்டாண்ட் துப்புரவு பணிக்கு பயன்படுத்தும் பொருட்கள், கழிப்பிடம் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள், பால் புகட்டும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பகல் நேரங்களில் ஆண் ஊழியர்கள் மையத்தில் அமர்ந்துள்ளனர். இதனால், தாய்மார்கள் தடுமாறுகின்றனர். எனவே, கரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள, பால் புகட்டும் மையத்தை, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ