உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா போராட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா போராட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா போராட்டம்ஈரோடு, நவ. 28-பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட மூன்று சங்கங்களின் சார்பில், ஈரோட்டில் தர்ணா போராட்டம் நடந்தது.பி.எஸ்.என்.எல்.இ.யு-ஏ.ஐ.பி.டி.பி.ஏ-டி.என்.டி.சி.டபிள்யூ.யூ ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், ஈரோட்டில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. ஊதியம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்களை உடனடியாக தீர்வு காண வேண்டும். பி.எஸ்.என்.எல்., 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் துவக்கத்தை விரைவுப்படுத்த வேண் டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், இ.பி.எப்.,-இ.எஸ்.ஐ. அமல்படுத்த வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.ஏ.ஐ.பி.டி.பி.ஏ. கோட்ட செயலாளர் மணியன் தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல்.இ.யு கோட்ட செயலாளர் பாலு துவக்க உரையாற்றினார். டி.என்.டி.சி.டபிள்யூ.யூ செயலாளர் சையது இத்ரீஸ், சிறப்புரையாற்றினார். பி.எஸ்.என்.எல்.இ.யு செல்வராஜன், மத்திய மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமசிவம், ஏ.ஐ.பி.டி.பி.ஏ.வை சேர்ந்த பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ