உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகளிர் தொழில் முனைவோருக்கு மானியத்தில் கடன் பெற அழைப்பு

மகளிர் தொழில் முனைவோருக்கு மானியத்தில் கடன் பெற அழைப்பு

கரூர், மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில், மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் கடன் உதவி வழங்கப்படும். இதில், 10 லட்சம் ரூபாய் வரை வங்கிகள் மூலம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். திட்ட தொகையில், 25 சதவீதம் என அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில், உற்பத்தி, சேவை, வணிக தொழில்கள் ஈடுபடலாம். 18 வயது முதல், 55 வயதிற்குட்பட்ட மகளிர் பயன்பெறலாம்.தகுதியும், ஆர்வமும் கொண்டவர்கள் போட்டோ, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, வங்கி கணக்கு விபரங்களுடன், www.msmeonline.tn.gov.inஎன்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, கரூர், தான்தோன்றிமலை மாவட்ட தொழில் மையம் அலுவலகம் மற்றும் 04234--255177, 8925533960- எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ