உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பெண் போலீஸ் எஸ்.ஐ., மகனை தொடர்ந்து மகள் மீதும் வழக்கு

பெண் போலீஸ் எஸ்.ஐ., மகனை தொடர்ந்து மகள் மீதும் வழக்கு

கரூர் : கரூர் அருகே, ஆயுதப்படை போலீசாரை தாக்கிய விவகாரத்தில், பெண் போலீஸ் எஸ்.ஐ., மகள் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் ராமானுார் பகுதியில் கடந்த, 29 இரவு ஆயுதப்படை போலீஸ் சரவணன் என்பவர் பணியில் இருந்தார். அப்போது அவரை தாக்கியதாக, திருச்சி மாவட்டம், தாத்தையாங்கார் பேட்டை போலீஸ் எஸ்.ஐ., லதா என்பவரின் மகன் சூர்யா உள்ளிட்ட, நான்கு பேரை போலீசார் கைது செய்து, பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சூர்யாவின் சகோதரி வைசாலி, 21, உறவினர் ஐஸ்வர்யா, 26, என்பவருடன் பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, பெண் போலீஸ் லாவண்யாவுடன், 30, தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். இதுகுறித்து, பெண் போலீஸ் லாவண்யா கொடுத்த புகார்படி, வைசாலி, ஐஸ்வர்யா ஆகியோர் மீதும், பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி