உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பெண்ணை கட்டையால் தாக்கிய கணவன், மனைவி மீது வழக்கு

பெண்ணை கட்டையால் தாக்கிய கணவன், மனைவி மீது வழக்கு

கரூர் : கரூர் அருகே, பெண்ணை கட்டையால் தாக்கியதாக கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், தளவாப்பாளையம் பஜார் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 57; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும் இடையே, நடைபாதை பயன்படுத்துவது தொடர்பாக, முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜேஸ்வரி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு சென்ற ரவிச்சந்திரன், அவரது மனைவி தாமரை செல்வி ஆகியோர், ராஜேஸ்வரியை தகாத வார்த்தையால் பேசி, கட்டையால் அடித்துள்ளனர். அதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி, போலீசில் புகார் கொடுத்தார்.இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீசார், ரவிச்சந்திரன், தாமரை செல்வி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ