உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வரதட்சணை கொடுமை 5 பேர் மீது வழக்கு பதிவு

வரதட்சணை கொடுமை 5 பேர் மீது வழக்கு பதிவு

குளித்தலை : பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கணவர் உள்பட ஐந்து பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.குளித்தலை அடுத்த, லாலாபேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யா, 28. பொய்யாமணி பஞ்., கோரப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி பிரகாஷ் என்பவருடன், 2021 ஜன.,17ல் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. கணவர் பிரகாஷ், மாமியார் தவமணி, மாமனார் மூக்கன் மற்றும் நாத்தனார்கள் அனுசியா, திவ்யா ஆகியோர், சத்யாவிடம் ஐந்து லட்சம் ரூபாய் வரதட்சணையாக கேட்டு தொந்தரவு செய்தனர்.இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2023 ஜூலை, 10ல் மாமியார் தவமணி, சத்யாவிடம் பணம் கேட்டு தகாத வார்த்தை பேசி, உறவினர்கள் மத்தியில் அவமானப்படுத்தி உள்ளார். இதனால் சத்யா, தன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.இது குறித்து கடந்த ஆண்டு, குளித்தலை மகளிர் போலீசில் சத்யா புகார் அளித்தார். போலீசார் விசாரித்து அறிவுரை வழங்கினர். சில மாதங்கள் கணவருடன் வசித்து வந்தார் சத்யா. மீண்டும் சத்யாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர்.இதையடுத்து, குளித்தலை மகளிர் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக நேற்று முன்தினம் இரவு கணவர், மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்கள் என ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ