மேலும் செய்திகள்
மணல் கடத்திய வாலிபர் கைது
14-Sep-2024
மணல் கடத்தியதாக அ.தி.மு.க., செயலாளர் மீது வழக்கு பதிவுகரூர், அக். 2-வாங்கல் அருகே, காவிரியாற்றில் இருந்து மணல் கடத்தியதாக, அ.தி.மு.க., கிளை செயலாளர் உள்பட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டம், வாங்கல் அருகே நெரூர் காவிரியாறு படித்துறை பகுதியில், நேற்று முன்தினம் போலீஸ் எஸ்.ஐ., பாபு உள்ளிட்ட, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காவிரியாற்றில் இருந்து மணல் கடத்தியதாக, அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க., கிளை செயலாளர் சந்தானம், 34; மலையாளி, 40; சசிக்குமார், 50; ரோஷன், 30; அபிநாஷ், 28; அசோக், 33; ஆகிய, ஆறு பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, ஐந்து மாட்டு வண்டிகள், இரண்டு பைக்குகள், அரை யூனிட் மணலையும் வாங்கல் போலீசார் பறிமுதல் செய்தனர்.
14-Sep-2024