உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / க.பரமத்தியில் மாட்டு சந்தை விவசாயிகள் எதிர்பார்ப்பு

க.பரமத்தியில் மாட்டு சந்தை விவசாயிகள் எதிர்பார்ப்பு

கரூர், க.பரமத்தியில், மாட்டு சந்தை துவங்க வேண்டும் என, விவசாயிகள் நீண்ட நாள் எதிர்பார்ப்பில் உள்ளனர். க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக போதுமான மழை பெய்யாததால், பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பையே நம்பியிருக்கின்றனர். இங்கு, மாட்டு சந்தை நடைபெறாததால் கறவை மாடுகள் வாங்க அல்லது விற்க வேண்டுமானால், 60 கி.மீ., துாரமுள்ள ஈரோடு மாவட்ட சிவகிரி சந்தைக்கோ அல்லது, 45 கி.மீ. துாரம் கரூர் அருகில், உப்பிடமங்கலம் வாரச்சந்தைக்கோ செல்ல வேண்டும். இதற்காக விவசாயிகள் அதிகாலை, 2:00 மணிக்கு எழுந்து சென்றால் மட்டுமே பசு, எருமை மாடு வாங்க, விற்க முடியும்.கால்நடைகளை டெம்போ வேன்களில் கொண்டு வர, இரு மடங்கு வாடகை வசூலிக்கப்படுகிறது, எனவே, க.பரமத்தியில் மாட்டு சந்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை