உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சி.ஐ.டி.யு., சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு., சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர்: கரூர் மாவட்ட ஆட்டோ, டாக்ஸி, வேன் ஓட்டுநர்கள் சங்கம் (சி.ஐ.டி. யு.,) சார்பில், மாவட்ட தலைவர் ரங்கராஜ் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த கூடாது. பைக் டாக்ஸியை அனுமதிக்க கூடாது. அண்டை மாநிலங்களுக்கு சென்று வர அனுமதி வழங்க வேண்டும். ஆன்லைன் அபராத முறையை கைவிட வேண்டும். ஸ்டிக்கர், புகைசான்று கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும். புதிய ஆட்டோ வாங்க, 10 ஆயிரம் ரூபாய் மான்யம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட சி.ஐ.டி.யு., தலைவர் ஜீவானந்தம், செயலாளர் முருகேசன், ஆட்டோ சங்க துணைத்தலைவர் சக்கரை முகமது, நிர்வாகிகள் சுப்பிரமணியம், சரவணன், ராஜா முகமது உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி