உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேன் மீது டூவீலர் மோதல் தேங்காய் வியாபாரி பலி

வேன் மீது டூவீலர் மோதல் தேங்காய் வியாபாரி பலி

கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மீது, டூவீலர் மோதியதில் தேங்காய் வியாபாரி உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் நொய்யல் குறுக்கு சாலை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 72; தேங்காய் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு, ேஹாண்டா சைன் பைக்கில், வேலாயுதம்பாளையம் அருகே முனிநாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மீது, டூவீலர் எதிர்பாராதவிதமாக மோதியது. அதில், டூவீலரில் சென்ற ராமசாமி, தலையில் படுகாயம் அடைந்து கரூரில் உள்ள, தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.இதுகுறித்து, ராமசாமியின் மகள் தாரணி, 40, கொடுத்த புகார்படி, வேன் டிரைவர் கேரளாவை சேர்ந்த சிவதாசன் என்பவர் மீது, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி