உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி

இடிந்து விழும் நிலையில்மேல்நிலை குடிநீர் தொட்டிகரூர், செப். 28-கரூர்-திருச்சி சாலை மூலகாட்டனுாரில் கடந்த, 2006-07 ல் சணப்பிரட்டி கிராம பஞ்சாயத்தாக இருந்த போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அதன் மூலம், மூலகாட்டனுார் பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.சணப்பிரட்டி கிராம பஞ்சாயத்து கடந்த, 2011 ல் கரூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. அதற்கு பிறகு, மேல் நிலை குடிநீர் தொட்டி சேதம் அடைந்தது. துாண்களில் உள்ள, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு, மேல்நிலை குடிநீர் தொட்டி மோசமாக உள்ளது.கரூரில் இருந்து திருச்சிக்கு மூலகாட்டனுார் வழியாக நாள்தோறும் பஸ், லாரி உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், எந்நேரமும் இடிந்து விழும் நிலையில், பிரதான சாலை யோரம் உள்ள, மேல்நிலை குடிநீர் தொட்டியால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சேதம் அடைந்த குடிநீர் தொட்டியை உடனடியாக, அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை