உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மே 13ல் கல்லுாரி கனவு நிகழ்ச்சி: கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்

மே 13ல் கல்லுாரி கனவு நிகழ்ச்சி: கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்

கரூர் : கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான கல்லுாரி கனவு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். பின், அவர் கூறியதாவது: பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ,- மாணவிகளுக்கு உயர்கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த 'கல்லுாரி கனவு' என்ற நிகழ்ச்சி மே, 13ல் கரூர் -கோவை சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் துறை வல்லுனர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனை வழங்க உள்ளனர். இதில் மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன் பெறலாம். நிகழ்ச்சி அன்று காலை, 9:00 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு கூறினார்.டி.ஆர்.ஓ., கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ