மேலும் செய்திகள்
மகள் மாயம் தந்தை புகார்
18-Apr-2025
குளித்தலை, குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின், 18 வயது மகள் தனியார் மகளிர் அறிவியல் கலை கல்லுாரியில் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். கடந்த 7 இரவு 7:00 மணியளவில் கண்ணுாத்துப்பட்டியில் உள்ள தனது தாத்தா ராஜூ வீட்டிற்கு சாப்பிட்டு விட்டு வருவதாக சென்றவர். வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
18-Apr-2025