மேலும் செய்திகள்
மகள் மாயம்; தந்தை புகார்
28-Jan-2025
குளித்தலை: குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்,. ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 53, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் நர்மதா, தோகைமலையில் தனியார் கல்லுாரி ஒன்றில், பி.எஸ்சி., படித்து வருகிறார். கடந்த, 9ல் இரவு 10:00 மணியளவில் துாங்கிக் கொண்டிருந்த நர்மதாவை, அதற்கு பின் காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்துதேடி வருகின்றனர்.
28-Jan-2025