உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலையில் தைப்பூச விழா குறித்த ஆலோசனை கூட்டம்

குளித்தலையில் தைப்பூச விழா குறித்த ஆலோசனை கூட்டம்

குளித்தலை: குளித்தலை சப்-கலெக்டர் அலுவலகத்தில், நேற்று கடம்பவ-னேஸ்வரர் கோவில் தைப்பூச திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட கலால் உதவி ஆணையர் கருணாகரன் தலைமையில் நடந்தது.டி.எஸ்.பி., செந்தில்குமார், சப்-கலெக்டர் நேர்முக உதவி-யாளர் மகுடேஸ்வரன், கடம்பவனேஸ்வரர் கோவில் செயல் அலு-வலர் தீபா, மண்டல துணை தாசில்தார் நீதிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கடம்பர் கோவில், ராஜேந்திரம், பெட்டவாய்த்தலை, அய்யர்-மலை, திருஈங்கோய்மலை, முசிறி, வெள்ளூர், கருப்பத்துார் ஆகிய எட்டு சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் வரும், 11ல் மாலை 4:00 மணி முதல் 5:00 மணிக்குள் சுவாமிகள் சந்திப்பும், 5:00 முதல் 6:00 மணிக்குள் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.பக்தர்கள் அதிகம் பேர் வருவர் என்பதால், மின்விளக்கு, மருத்-துவ சுகாதார பணி, போக்குவரத்து, தீர்த்தவாரியின் போது ஒவ்-வொரு சுவாமிக்கும் ஐந்து நபர்கள் மட்டும் கலந்து கொள்ளுதல், ஏழு சுவாமிகள் டிராக்டர் வாகனத்தில் வருவது போல், கடம்பர்-கோவில் சுவாமியும் டிராக்டரில் வர வேண்டும். மது அருந்தி சுவாமிகளை துாக்க கூடாது, சமுதாய ரீதியாக பனியன் அணி-தலை தவிர்த்தல் வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் சுவாமிகள் தீர்த்தவாரியில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என, ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்-டது. கோவில் செயல் அலுவலர்கள் தீபா, சித்ரா, மேனகா, நித்யா, தங்கராஜ், முசிறி தீயணைப்புத்துறை அலுவலர் கர்ணன், குளித்-தலை மின்வாரிய உதவி பொறியாளர் நடராஜன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், சிவாச்சாரியார்கள், சமூக ஆர்வ-லர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை