உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம்

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம்

கரூர், டிச. 20-கரூர் கலெக்டர் கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக நடத்த சிறப்பு முகாம்களில், பெறப்பட்ட பல்வேறு வகையான விண்ணப்ப படிவங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட பார்வையாளரும், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலருமான மகேஸ்வரி தலைமை வகித்தார். பின், அவர், கூறியதாவது:வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது, வாக்காளர் பட்டியலில் இருந்து இறப்பு, இடம் பெயர்வு, இரட்டை பதிவு ஆகியவற்றை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் ஆகியவை தொடர்பான திருத்தங்கள் மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம் நடந்தது. இதில், 25 ஆயிரத்து, 844 விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. வரும், 24-க்குள் படிவங்கள் மீது வாக்காளர் பதிவு அலுவலர்களால் முடிவு எடுக்கப்படும். பின் ஜன., 6 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் சுதா, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், தேர்தல் தாசில்தார் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ