உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மா.கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்

கரூர்:கரூர் மாநகர மா.கம்யூ., கட்சி சார்பில், செயலாளர் தண்டபாணி தலைமையில், மாநகராட்சி அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், கரூர் லைட் ஹவுஸ் கார்னர் அமராவதி பாலத்தை, மீண்டும் நடைபயிற்சிக்கு திறக்க வேண்டும். கரூர் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், மத்திய அரசு, மாநில அரசுக்கு வழங்க வேண்டிய, நிதியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட மா.கம்யூ., செயலாளர் ஜோதிபாசு, சி.ஐ.டி.யு., செயலாளர் சுப்பிரமணி உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !