உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் விடிய, விடிய மழை: குடியிருப்பு பகுதியில் மழைநீர்

கரூரில் விடிய, விடிய மழை: குடியிருப்பு பகுதியில் மழைநீர்

கரூர்: கரூர் அருகே விடிய, விடிய பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை, நேற்று அதிகாலை வரை நீடித்தது. கரூர் நகரில் மட்டும், 47 மி.மீ., மழை பெய்தது. இதனால், கரூர் சுங்ககேட் கணபதி நகர், கலைஞர் நகர், தான்தோன்றிமலை வெங்கடேஷ்வரா நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர். பிறகு, படிப்படியாக மழை நீர் வடிய தொடங்கியது. அதேபோல், தான்தோன்றிமலை மேல் நிலைப்பள்ளி வளாகத்திலும், மழை நீர் நேற்று தேங்கி நின்றது.கரூரில், 47 மி.மீ.,கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை மழை பெய்தது. அதிகபட்சமாக கரூரில், 47 மி.மீ., மழை பெய்தது.தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும், பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை தொடர்கிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை, நேற்று அதிகாலை வரை நீடித்தது.கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 47, அரவக்குறிச்சி, 25.6 அணைப்பாளையம், 27.4, க.பரமத்தி, 44.8, குளித்தலை, 14.6, தோகைமலை, 11, கிருஷ்ணராயபுரம், 29, மாயனுார், 42, பஞ்சப்பட்டி, 26, கடவூர், 8.4, பாலவிடுதி, 10.1, மயிலம்பட்டி, 7.2 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 24.43 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை