உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாழை கமிஷன் மண்டியில் வரத்து சரிவால் விற்பனை மந்தம்

வாழை கமிஷன் மண்டியில் வரத்து சரிவால் விற்பனை மந்தம்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, மகிளிப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் விளை நிலங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இதில், பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பச்சை நாடன் ஆகிய ரகங்கள் சாகுபடி அதிகம் நடக்கிறது. வாய்க்கால் பாசனம் மூலம் வாழை சாகுபடிக்கு தண்ணீர் செல்கிறது. வாய்க்காலில் தண்ணீர் வரத்து குறைந்ததால், வாழை சாகுபடி பரப்பும் குறைந்தது.இதனால், நேற்று, குறைந்த வாழைத்தார்களை மட்டுமே, கமிஷன் மண்டிகளுக்கு விவசாயிகள் கொண்டு வந்ததால், விற்பனை மந்த நிலையில் இருந்தது. இதில் பூவன் தார், 300 ரூபாய், ரஸ்தாளி, 400 ரூபாய், கற்பூரவள்ளி, 250 ரூபாய், பச்சைநாடன், 450 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ