மேலும் செய்திகள்
119 கடைகள், 24 வீடுகள் இடிக்கும் பணி தொடக்கம்
19-Dec-2024
வீட்டு வசதி வாரிய குடியிருப்புவீடுகள் இடிக்கும் பணி துவக்கம்கரூர், டிச. 22-கரூர், காந்திகிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரியத்தின் சேதமடைந்த வீடுகளை இடிக்கும் பணி துவங்கியது.கரூர், தெற்கு காந்திகிராமத்தில் தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்புகள் உள்ளன. 300க்கும் மேற்பட்ட வீடுகளில், அரசு அலுவலர்கள் குடியிருந்து வருகின்றனர். போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.குடியிருப்புகளில் உள்ள சுற்றுச்சுவர்கள் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. பால்கனி சுவர்கள் இடிந்து விழுந்தபடி உள்ளன. ஒவ்வொரு வீட்டின் மேல்புறம் உள்ள கான்கிரீட் சுவர்கள், காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. தண்ணீர் பிடிக்கும் இடம், வாகனம் நிறுத்தும் இடங்களில் போதுமான மின் விளக்குகள் இல்லை. மின் மீட்டர் பெட்டிகள் சேதமடைந்துள்ளன. மாடியில் உள்ள குடிநீர் தொட்டிகளில் மூடி உடைந்த நிலையில் காணப்படுகிறது என, பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.இந்நிலையில், முற்றிலும் சேதமடைந்துள்ள வீட்டு வசதி வாரிய வீடுகளை, இடிக்கும் பணி நேற்று துவங்கியது. பொக்லைன் இயந்திரம் மூலம், இடிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
19-Dec-2024