ரூ.10 கோடியில் வளர்ச்சி பணி; எம்.எல்.ஏ., தொடங்கி வைப்பு
குளித்தலை: குளித்தலை நகராட்சியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், பெரியார் நகர் பரிசல் துறை சாலை பகுதியில், நவீன எரிவாயு தகன மேடை, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது.நவீன எரிவாயு தகன மேடை துவக்க விழாவிற்கு, நகராட்சி தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். துணைத்தலைவர் கணேசன், கமிஷனர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., மாணிக்கம், நவீன எரிவாயு தகன மேடையை தொடங்கி வைத்தார். இதேபோல், மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தில், பெரியார் நகர் பகுதியில், 9.12 கோடி ரூபாய் மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான துவக்க நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா, குளித்தலை தி.மு.க., ஒன்றிய செயலாளர் தியாகராஜன், முன்னாள் மாவட்ட பஞ்., குழு துணைத்தலைவர் தேன்மொழி, அரசு ஒப்பந்ததாரர் ஹரிஹரன், குளித்தலை நகர மக்கள் நல வாழ்வு சங்க பொறுப்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.