| ADDED : பிப் 10, 2024 10:20 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, குமார மங்கலம் கிராமத்தில் உள்ள கருப்பண்ணன் கோவிலில் பவுர்ணமி, அமாவாசை அன்று கோவில் பூசாரி அருண் அருள் வாக்கு சொல்லி வருகிறார். சேலம், தருமபுரி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து அருள் வாக்கு பெற்று பயன் அடைந்தவர்கள், ஆடி மற்றும் தை மாத அமாவாசை அன்று பால் குடம், அக்னி சட்டி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.இந்த வகையில் நேற்று காலை, குமாரமங்கலம் ரயில்வே கேட் அருகில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், அருள் வாக்கு பெற்று பயன் அடைந்தவர்கள் பால் குடம், அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கருப்பண்ணன் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வேம்படி கருப்புக்கு ஆடு குட்டி காவல் குடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பின் கோவில் பூசாரி அருண், அவருடைய மகன் வேம்படி கருப்புசாமி, ஆட்டு குட்டி குடித்து பக்தர்களுக்கு அரிவாள் மேல் நின்று அருள் வாக்கு கூறினர். ஏராளமானோர் கலந்து கொண்டனர். அருள் வாக்கு பெற்று பயன்பெற்ற பக்தர்கள் ஆட்டு கிடா வெட்டி வேண்டுதல் நிறைவேற்றினர்.