உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கடல் முற்றுகை போராட்டம் கரூரில் பா.ஜ., துண்டு பிரசுரம்

கடல் முற்றுகை போராட்டம் கரூரில் பா.ஜ., துண்டு பிரசுரம்

கரூர்: தமிழக பா.ஜ., சார்பில் வரும் 7 ம் தேதி நடக்கும் கடல் முற்றுகை போராட்டம் குறித்து கரூர் மாவட்ட பா.ஜ., சார்பில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் போது, இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகின்றனர். இதனை கண்டித்து தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் ராமேஸ்வரத்தில் வரும் 7 ம் தேதி கடல் முற்றுகை போராட்டம் நடக்கிறது. போராட்டத்தை விளக்கி கரூர் பஸ் ஸ்டாண்டில், மாவட்ட பா.ஜ., தலைவர் சிவசாமி தலைமையில் துண்டு பிரசுங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி செயலாளர் கவிதா, மாவட்ட செயலாளர் கோபி, வக்கீல் அணி செயலாளர் தனசேகரன், நிர்வாகிகள்உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ