உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஏழை மாணவிக்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நிதியுதவி வழங்கல்

ஏழை மாணவிக்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நிதியுதவி வழங்கல்

குளித்தலை: குளித்தலை அருகே தோகமலையில் ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவி, டாக்டருக்கு படிக்க வசதியாக எம்.எல்.ஏ., பாப்பா சுந்தரம் 20 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார். கரூர் மாவட்டம் தோகமலை பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரது மகள் வீரலட்சுமி. இவர் செர்வைட் மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ் 2 தேர்வில் 1,200க்கு 1165 மதிப்பெண் பெற்று மெட்ரிக் பள்ளியில் முதலிடம் பெற்றார். தந்தை கலியபெருமாள் கடந்த 13 ஆண்டுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதால், தாய் பெத்தமாள் உதவியுடன் வீரலட்சுமி படித்து வந்தார். வீரலட்சுமிக்கு மதுரை மருத்துவக்கல்லூரியில் டாக்டர் படிப்பு படிக்க 'சீட்' கிடைத்தது. ஆனால், வசதியில்லாததால், பெத்தம்மாள் குளித்தலை எம்.எல்.ஏ., பாப்பா சுந்தரத்தின் உதவியை நாடினார். இதையடுத்து எம்.எல்.ஏ., பாப்பா சுந்தரம், மாணவி வீரலட்சுமி டாக்டர் படிப்புக்கு உதவித்தொகையாக 20 ஆயிரம் ரூபாய் அளித்தார். வங்கி மூலம் வீரலட்சுமிக்கு கடன் வசதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்' என எம்.எல்.எல்.ஏ., பாப்பா சுந்தரம் தெரிவித்தார்.அப்போது, கிராமியம் தொண்டு நிறுவன இயக்குனர் நாராயணன், வளையப்பட்டி ராஜா, கருணாகரன், மதி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ