உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கி.புரத்தில் வளர்ச்சிப்பணி: கலெக்டர் திடீர் ஆய்வு

கி.புரத்தில் வளர்ச்சிப்பணி: கலெக்டர் திடீர் ஆய்வு

கரூர்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் யூனியனில் நடக்கும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை கரூர் கலெக்டர் ÷ஷாபனா ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மணவாசி பஞ்சாயத்து மேட்டுவாஞ்சி வாய்க்கால் முதல் தலைப்பு வாய்க்கால் வரை ஆறு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடந்து வரும் கால்வாய் தூர்வாரும் பணி, ரங்கநாதபுரம் பஞ்சாயத்து கட்டளையில் ஒரு லட்சத்து 8,000 ரூபாய் மதிப்பில் கட்டளை ஆதிதிராவிடர் காலனியில் ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும், மலையப்பபுரத்தில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும், மகளிர் சுகாதார வளாகம் சீரமைப்புப் பணியையும், மணவாசி பஞ்சாயத்தில் மாவட்ட பஞ்சாயத்து நிதியிலிருந்து கோரகுத்தியில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மையத்தையும் கலெக்டர் ÷ஷாபனா பார்வையிட்டார். முன்னதாக மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டு வரும் கதவணை பணிக்கு ரங்கநாதபுரம் வடக்கு பகுதி மற்றும் மாயனூரில் நீர்பிடிப்புப் பகுதிக்கு கையகப்படுத்தப்பட்ட இடங்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, குளித்தலை ஆர்.டி.ஓ., மாரிமுத்து, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மூக்கன், யூனியன் அலுவலர்கள் ராஜகோபால், தங்கவேல் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ