உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் பாரதிய மஸ்தூர் சங்க செயற்குழு கூட்டம்

கரூரில் பாரதிய மஸ்தூர் சங்க செயற்குழு கூட்டம்

கரூர்: பாரதிய மஸ்தூர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம், தையல் தொழிலாளர் சங்க செயற்குழு கூட்டம் கரூரில் நடந்தது. மாவட்ட தலைவர் துரைரவி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நவம்பர் 23ம் தேதி டில்லி பேரணியில் 75 ஆண்கள், 25 பெண்கள் என 100 பேர் பங்கேற்க டிக்கெட் எடுக்கப்பட்டுள்ளது. நலவாரியங்களை ஒருங்கிணைக்கப்பட வேண்டும். தொழிலாளர்களை நலவாரியம் ஜாதி ரீதியாக பிரித்து உதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் என அரசை கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் மேட்டாங்கிணம், நத்தமேடு, கோரகுத்தி வழியாக பஸ் விடவும், கரூர் -சேலம் பைபாஸ் வழியாக டவுன் பஸ் இயக்கவும் போக்குவரத்து துறை அமைச்சருக்கு வலியுறுத்துவது, விவசாய தொழிலாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு வழங்கும் அனைத்து உதவியும் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கும் வழங்க வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ஆனந்தராஜ், புவனேஸ்வரி, சாந்தி, கருப்பையா, கனகலட்சுமி, சவுடேஸ்வரி, ரவி ஆறுமுகம், வெண்ணிலா உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் சவுந்திரராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ