உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் வி.எஸ்.பி., இஞ்ஜினியரிங் கல்லூரியில் 2 நாள் கருத்தரங்கு

கரூர் வி.எஸ்.பி., இஞ்ஜினியரிங் கல்லூரியில் 2 நாள் கருத்தரங்கு

கரூர்: கரூர் வி.எஸ்.பி., பொறியியல் கல்லூரியில் பசுமை பொறியியல் மற்றும் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு கல்லூரி முதல்வர் மஹேந்திரா கவுடா தலைமையில் நடந்தது. கோவை பைமெட்டல் பியரிங்ஸ் நிறுவன செயல் இயக்குனர் மணி கருத்தரங்கை துவக்கி வைத்து,'' இன்றைய சூழ்நிலையில் பசுமை தொழிற்சாலைகளின் தேவை மற்றும் பங்கு ஆகியவை குறித்தும், ஒவ்வொரு தொழிற்சாலையும் பசுமை தொழிற்சாலையாக மாற்றப்பட வேண்டிய அவசியம் குறித்தும்,'' பேசினார். தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆசிரியர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கில் 150க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. கல்வியாளர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களால் சிறந்த கட்டுரை தேர்வு செய்யப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகள் அனைத்தும், பசுமை பொறியியல் மற்றும் தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை தொகுப்பாக வெளியிடப்பட்டது. கருத்தரங்கின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், இந்துஸ்தான் தொழில்நுட்ப நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அலுவலர் சத்தியப் பிரகாஷ்சேகரன் பங்கேற்று, சிறந்த உலகை உருவாக்க அனைவரும் ஒன்றுப்பட்டு பசுமை தொழில் நுட்பம் மேம்பட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். ஏற்பாடுகளை விமான இயல் துறைத்தலைவர் கோபிநாத், கணிப்பொறியியல் துறை தலைவர் சேனாதிபதி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ