குளித்தலையில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
குளித்தலை, குளித்தலை அடுத்த அய்யர்மலையில், குளித்தலை சட்டசபை தி.மு.க., செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலருமான செந்தில் பாலாஜி தலைமை வகித்தார். குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் வரவேற்று பேசினார்.முன்னாள் மாவட்ட பஞ்., குழு துணைத் தலைவர் தேன்மொழி தியாகராஜன், தோகைமலை யூனியன்குழு முன்னாள் தலைவர் சுகந்தி சசிகுமார், ஒன்றிய செயலர்கள் சந்திரன், தியாகராஜன், அண்ணாதுரை, துணை செயலர் விஜயகுமார், மாநில வர்த்தக அணி துணை செயலர் பல்லவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:கரூரில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவை, மாநில மாநாட்டை போல பிரமாண்டமாக கரூரில் நடத்த வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். சட்டசபை தேர்தலில் நமது மாவட்டத்தின் முதல் பிரசாரமாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும். குளித்தலை எம்.எல்.ஏ., இந்த மாநாட்டிற்கு, 25 ஆயிரம் பேர் வர வேண்டும் என்று கூறினார். ஆனால், 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு பேசினார்.இதையடுத்து, மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.ஆலோசனை கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.